படப்பிடிப்பில் நடிகைக்கு நடந்த சம்பவம்.. தொண்டையில் சிக்கிய மூக்குத்தி!
படப்பிடிப்பின்போது பிரபல பஞ்சாப் நடிகை ஷெஹ்னாஸ் கில்லுக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பிரபல ப்ஞ்சாப் நடிகை ஷெஹ்னாஸ் கில். இவர் ஹிந்தி, பஞ்சாபி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார்.ஒரு சில பஞ்சாபி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இஷ்க்நாமா என்ற பஞ்சாபி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஓடும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த மூக்குத்தி கழன்று வாய்க்குள் விழுந்துள்ளது.
அந்த மூக்குத்தி தொண்டையில் சிக்கியதால் ஷெஹ்னாஸ் கில் இருமி மூச்சு விட திணறியுள்ளார். இதை பார்த்த சக நடிகர் சௌரப் சச்தேவா உடனடியாக ஓடிவந்து அவருக்கு உதவி செய்துள்ளார். அவர் ஷெஹ்னாஸின் முதுகில் தட்டிக்கொடுத்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டுவர உதவியுள்ளார். இந்த சம்பவம் ப்படப்பிடிப்பு தளத்தில் சிறிது நேரம் பரப்பரப்பை ஏற்படுத்தியது. சிறிது நேரத்திற்குப் பிறகு ஷெஹ்னாஸ் கில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தொடர்ந்து நடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஷெஹ்னாஸின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அவரது அர்ப்பணிப்பை பாராட்டியதுடன், படப்பிடிப்பை விட முதலில் உங்கள் பாதுகாப்பை கவனியுங்கள் என அக்கறையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.