காதல் ஹார்ட்டை காற்றில் பறக்கவிட்ட ஷெரின் - கியூட் எக்ஸ்ப்ரெஷன்ஸ் வீடியோ
துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான நடிகை ஷெரின் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் என்றால் அவர் தான் ஷெரின்.
Fri, 10 Jul 2020

இவருடைய பொருமை, நேர்மை, அனைவரிடமும் நடந்துக்கொண்ட பக்குவம் என அனைத்து போட்டியாளர்களாலும் தேவதை என கொண்டாடப்பட்டவர் தான் ஷெரின். அதனைத்தொடர்ந்து ஈழத்து நடிகர் தர்ஷன் உடனான காதல் என கிசுகிசுக்கப்பட்டாலும் மவுனமாகவே இருந்து வந்தார்.
இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாகிராமில் டிக்டாக் அம்சங்கள் கொண்ட ரீல்ஸ்'ல் ரொமான்டிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஷெரினின் கியூட்டான இந்த எக்ஸ்ப்ரெஷன்ஸ் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.