×

உடல் எடையால் தான் சந்தித்த அவமானம் குறித்து வருந்திய ஷெரின்

துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான நடிகை ஷெரின் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் என்றால் அவர் தான் ஷெரின்.

 

இவருடைய பொருமை, நேர்மை, அனைவரிடமும் நடந்துக்கொண்ட பக்குவம் என அனைத்து போட்டியாளர்களாலும் தேவதை என கொண்டாடப்பட்டவர் தான் ஷெரின். அதனைத்தொடர்ந்து ஈழத்து நடிகர் தர்ஷன் உடனான காதல் என கிசுகிசுக்கப்பட்டாலும் மவுனமாகவே இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்ப்போது உடல் எடையை குறைத்து வியப்பில் ஆழ்த்தும் body transformation போட்டோவை வெளியிட்டுள்ளார்.  அந்த பதிவில், " "ஒரு வருடத்தில் என்னுடையில் எடையில் 10 கிலோ மாற்றம். நான் முதலில் அப்படி இருந்த போதும் மகிழ்ச்சியாக தான் இருந்தேன்.

தற்போது நான் எப்படி இருக்கிறேன். எடையை குறைப்பது மிக சுலபம், ஆனால் புண்படுத்தும் வகையில் கூறிய மோசமான வார்த்தைகளை உங்களால் திரும்ப பெற முடியாது. ஒருவர் சிரிப்பதற்கும் அல்லது யாரோ ஒருவர் அழுவதற்கும் நீங்கள் காரணமாக இருக்கலாம். அதனால் நல்ல விஷயத்தை தேர்ந்தெடுங்கள்" என ஷெரின் தான் சந்தித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News