×

கொரோனா தடுப்பூசியால் ரொம்ப கஷ்டப்பட்டேன்... ஷெரின் போட்ட பதிவு

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஷெரின் பிக்பாஸ் 3வது சீசனில் மிகவும் பிரபலமானார்.

 
BeFunky_Collage

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஷெரின் பிக்பாஸ் 3வது சீசனில் மிகவும் பிரபலமானார்.

பிக்பாஸ் 3வது சீசனில் ஷெரின்  கண்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியானார்கள். காரணம் ஷெரினா இது என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இருந்தார்.

2002ம் ஆண்டு தனுஷுடன் துள்ளுவதோ இளமை என்கிற படத்தில் ஷெரின் நாயகியாக நடித்திருந்தார்.

அதில் மிகவும் ஒல்லியாக அழகாக காணப்பட்டார், பிக்பாஸ் வரும் போது மிகவும் குண்டாக அடையாளம் தெரியாதபடி இருந்தார்.

பிக்பாஸிற்கு பிறகு இப்போது மீண்டும் பழைய நிலைக்கு அவர் வந்துவிட்டார் என்று தான் கூற வேண்டும். அண்மையில் அவர் தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

அதன்பின் அவருக்கு சரியான உடம்பு வலி, ஜுரம், தலைவலி, மிகவும் சோர்வாக உள்ளது. அப்படியென்றால் தடுப்பூசி வேலை செய்கிறது என்பது தெரிகிறது, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என பதிவு செய்திருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News