×

ஆபாச வீடியோவால் சிக்கல்... கோர்ட்டுப் படியேறிய கவர்ச்சி நடிகை

பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா முன் ஜாமீன் கேட்டு மும்பை நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். 
 

பாலிவுட் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் ஆபாச வீடியோக்களில் ஷெர்லின் சோப்ரா நடித்து வருவதாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்தநிலையில், ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றியதாக ஷெர்லின் சோப்ரா மீது மும்பை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 


இதையடுத்து, கைதாகாமல் இருக்க ஷெர்லின் சோப்ரா மும்பை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை மும்பை செஷன்ஸ் கோர்ட் நிராகரித்தது. இதனால், முன் ஜாமீன் கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் ஷெர்லின் சோப்ரா மனுத் தாக்கல் செய்திருக்கிறார். 


அதில், தன்னுடைய வீடியோக்களை யாரோ திருடி அனுமதியில்லாமல் இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக மனுவில் ஷெர்லின் சோப்ரா குறிப்பிட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட தனக்கு நீதி வழங்காமல் தன்னைக் குற்றவாளி போல மும்பை போலீஸ் நடத்துவதாகவும் அவர் மனுவில் புகார் தெரிவித்திருக்கிறார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News