×

அவரு வீட்டுல பாரின் பொண்ணு இருக்கு… அவருக்குக் கொரோனா இருக்குமா ? நடிகரை வம்பிழுக்கும் ஸ்ரீரெட்டி !

தெலுங்கு நடிகரும் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாணை வம்பிழுக்கும் விதமாக நடிகை ஸ்ரீரெட்டி முகநூலில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

 

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்களைக் கூறி, அவர்கள் தன்னை வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் ரீதியாதப் பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பைக் கிளப்பியவர். சினிமா வாய்ப்புக்காக இப்படி சர்ச்சைகளைக் கிளப்புகிறார் என சொல்லப்பட்டாலும் அவருக்கு இதன் மூலம் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து ஆந்திராவில் இருந்து வெளியேறி சென்னையில் தங்கி கொண்டு சில தமிழ் படங்களில் நடித்து வரும் ஸ்ரீரெட்டி அவ்வப்போது சமூக வலைதளங்களில் பவன் கல்யாண் உள்ளிட்ட பிரமுகர்களைக் கலாய்க்கும் விதமாகப் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

அதன் ஒரு கட்டமாக இப்போது தனது முகநூல் பக்கத்தில் ‘ பவன், தன்னுடைய வீட்டில் வெளிநாட்டு பெண் ஒருவரை வைத்து இருக்கிறார். அதனால் அவருக்குக் கொரோனா பரவி இருக்குமா ?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியான அண்ணா லெஸ்நெவா ரஷ்யாவைச் சேர்ந்தவர். அவரைக் குறிப்பிட்டுதான் ஸ்ரீரெட்டி இவ்வாறு கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News