×

அவளும் பெண் தானே... பீட்டரின் முன்னாள் மனைவி குறித்து வனிதா!

நடிகை வனிதா - பீட்டர் பால் என்பவரை நேற்று ஜூன் 27ம் தேதி மூன்றாம் திருமணம் செய்துகொண்டு புது வாழ்க்கை துவங்கியுள்ளார். இந்நிலையில் பீட்டர் பால் மனைவி  எலிசபெத் ஹெலன் என்னிடமிருந்து முறையாக விவாகரத்து கூட பெறாமால் பீட்டர்  வனிதாவை திருணம் செய்துகொண்டுள்ளார் என புகார் அளித்துள்ளார்.

 

இதுகுறித்து பேசியுள்ள வனிதா “பீட்டர் பால் கடந்த 8 வருடமாக தனியாகத் தான் வாழ்ந்து வந்தார். நல்ல மனிதர். திருமணம் முடிந்து நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம். வனிதா விஜயகுமார் என்ற பெயரைக் கேட்டாலே சிலர் அதை வைத்து விளம்பரம் தேட நினைக்கிறார்கள்.

பீட்டரின் முதல் மனைவியும் ஒரு பெண் தான். இந்த நேரத்தில் அவரைப் பற்றி நான் குறை கூற விரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் யாரோ தூண்டிவிட்டு ரூ.1கோடி பணம் பறிப்பதற்காக இப்படி ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதை நங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என கூலாக கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News