×

சிவாஜிராவ் ரஜினியாக மாறிய தினம் இன்று – கவிதாலயா பூரிப்பு !

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் முக்கியமான தினமான இன்று கவிதாலயா நிறுவனம் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

 

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் முக்கியமான தினமான இன்று கவிதாலயா நிறுவனம் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

பெங்களூருவில் நடத்துனராக பணிபுரிந்து வந்த சிவாஜி ராவ் கெய்க்வாட் தமிழ்நாட்டுக்கு வந்து நாடகங்களில் நடித்து கே பாலச்சந்தரின் பார்வை பட்டு இப்போது தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லாமல் இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டாராக உள்ளார். ஆம் ரஜினிகாந்த்தின் வாழ்க்கையின் முக்கியமான நாள் இன்று.

கே பாலச்சந்தர் தனது மூன்று முடிச்சு படத்தில் அறிமுகப்படுத்திய போது ரஜினிக்கு இதே போன்ற ஒரு ஹோலி பண்டிகை அன்றுதான் ரஜினிகாந்த் எனப் பெயர் சூட்டினார். இதுகுறித்து அவரது தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா ‘சிவாஜி ராவ் ரஜினிகாந்த் ஆக மாறிய நாள்! வசந்த காலத்தை வரவேற்கும் வண்ணங்களின் திருவிழாவான இதே ஹோலி அன்று தான், நம் இயக்குனர் சிகரம் #KB அவர்களால் "சிவாஜி ராவ் கைக்வாட் நம்மில் ஒருவராக

@rajinikanth ஆக பெயர் சூட்டப்பெற்றார்" எனும் பசுமையான நினைவுகளை பகிர்வதில் மகிழ்கிறது கவிதாலயா!’ எனத் தெரிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News