Categories: Cinema News latest news

ரஜினிக்கு டஃப் கொடுக்கும் சின்னத்திரை பிரபலம்…! சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..

விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளையாக வருபவர் பாடகி சிவாங்கி கிருஷ்ணன். விஜய்டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். ஆனால் எலிமினேட் ஆகி நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

ஆனால் அதுதான் அவரின் வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. இவரின் மழலை கலந்த பேச்சால் எல்லாரையும் ஈர்த்தார். அதுவே அவரின் தொடர்ச்சியான வெற்றிக்கு வழி காட்டியது.

தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு, பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்றார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார். அந்த நிகழ்ச்சிக்காக தினமும் வித்தியாசமான உடையணிந்து மக்களை என்டெர்டெய்ன் பண்ணி வருகிறார்.

இந்த நிலையில் எந்திரன் 2.0 வில் ரோபாவாக ரஜினியின் வேடம் அணிந்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார். இயக்குனர் சங்கர் எத்தனையோ லட்சம் செலவு பண்ணி மேக்கப்பெல்லாம் போட்டு அந்த் படத்தை எடுத்திருக்கும் நிலையில் வெரும் லோ பட்ஜெட்டில் அசால்டா ரோபாவாக வந்து கலக்கி கொண்டிருக்கிறார்.

அந்த வீடியோ இதோ : https://www.instagram.com/reel/CcUb_NfF9v8/?utm_source=ig_web_copy_link

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini