×

மிர்ச்சி சிவாவுடன் இணையும் சிவாங்கி - காசேதான் கடவுளடா..

இந்த படத்தினை மிர்ச்சி சிவா, யோகி பாபு நடிப்பில் ரீமேக் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ஆர்.கண்ணன்

 
a0ffc22c-41c1-4267-9e1d-f7bfd56725e6

மிர்ச்சி சிவா, யோகி பாபு நடிப்பில் காசேதான் கடவுளடா திரைப்படத்தை ரீமேக் செய்ய உள்ளார் இயக்குனர் ஆர். கண்ணன். இவர்கள் இருவரும் கலகலப்பு முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் இணைந்து நடித்த இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே சுமோ திரைப்படம் உருவாக்கி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. 1972ம் ஆண்டு லட்சுமி, மனோரமா, முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாநத், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் காசேதான் கடவுளடா. 

இந்நிலையில் இந்த படத்தினை மிர்ச்சி சிவா, யோகி பாபு நடிப்பில் ரீமேக் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ஆர்.கண்ணன். இந்த படத்தில் முத்துராமன் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் யோகி பாவும், மனோரமா கேரக்டரில் ஊர்வசியும் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. இதில் மிர்ச்சி சிவா, யோகி பாபுவுடன், பிரியா ஆனந்த், குக் வித் கோமாளி மூலம் பிரபலமான சிவாங்கி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். கண்ணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

shivangi
 

From around the web

Trending Videos

Tamilnadu News