×

பாலாஜி லவ் டிராக்கில் விரிசல்? உள்ளே நுழையும் சிவானி முன்னாள் காதலன்!

நம்ம பிகில் பாண்டியம்மாவும், பகல் நிலவு அர்ஜுனும் பிக்பாஸின் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

இந்த வாரம் ஒருவர் வெளியேற உள்ள நிலையில், புதுசா இருவர் உள்ளே நுழைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை சுற்றி வெடித்துள்ள சர்ச்சைகளை பார்த்தால், இரண்டு பேர் கூட வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு' சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் முகமது அசீம். இவர் தான் பிக் பாஸ் வீட்டிற்கு கடைசியாக நுழையப் போகும் ஆண் போட்டியாளர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டின் செல்லக் குட்டியாகவும் கொலு பொம்மையாகவும் திகழும் ஷிவானிக்கு இவர் தான் பகல் நிலவு சீரியலில் ரீல் ஜோடி, இருவரும் இணைந்து நெருக்கமாக செய்துள்ள டிக் டாக் வீடியோக்கள் எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் இவர் இடம்பெற்றால், இன்னொருவருக்கு கடும் போட்டி இருக்கும் என்றும் தெரிகிறது.

அசீம் வருகையால் பாலாஜி காதல் டிராக்கில் விரிசல் விழும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவும் புது ஸ்டாடர்ஜியாக கூட இருக்கலாம் மக்களே!

From around the web

Trending Videos

Tamilnadu News