×

திருமணமான நடிகருடன் லிவிங் டூ கெதரில் இருக்கும் ஷிவானி... ஷாக்கில் ரசிகர்கள்
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ஷிவானி நாராயணன் குறித்த பகீர் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
 

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இதில் கலந்து கொண்டவர் நடிகை ஷிவானி நாராயணன். பெரிய எதிர்பார்ப்பில் உள்ளே வந்தவர், ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தான் கொடுத்தார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் வரை, அம்மணி வாயை திறந்து எந்த சண்டையும் போடாமல் அமைதியாகவே இருந்தார். பாலாஜியுடன் காதல் கன்டெண்ட் தவிர உருப்படியாக எதையும் செய்யாமல் இருந்தார். அவர் அம்மா வந்த 30 நிமிடத்தில் நிகழ்ச்சியில் சூடேற்றினார். தீப்பற்றி எரிந்தது. 

தொடர்ந்து, அந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருந்த அசீம் பல நாட்களாக குவாரண்டைனில் இருந்தும் கலந்து கொள்ளவில்லை. தன்னை சிலர் தடுக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டினார். அப்போதே, அது அம்மணியின் அம்மா வேலையாக தான் இருக்கும் எனக் கிசுகிசுக்கப்பட்டது. அதற்குரிய காரணம் தற்போது தான் தெரியவந்துள்ளது.

ஷவானி அசீமுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருவரும் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், விரைவில் இவர்கள் திருமணம் குறித்து அறிவிப்புக் கூட வெளிவரலாம் என விவரமறிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள். அண்மையில், அசீம் முறையாக விவகாரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News