×

பாலா மாமாவை மயக்கிய சிவானி... டாஸ்க்கில் அம்போவான பரிதாபம்!

ஜித்தன் ரமேஷ், ஷிவானி மற்றும் ஆஜீத் டீம் மணிக்கூண்டு டாஸ்க்கில் 2ம் இடம் வந்ததே பலருக்கும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
 

மூன்றாவது புரமோவை பார்த்து முடித்ததும், அந்த டீமுக்கு கிடைத்த லக்சரி பட்ஜெட் பூஜ்ஜியம் ஆகி விட்டது என பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் பலர், பிக் பாஸ் எடிட்டரை முதல் முறையாக குழப்பமான புரமோவுக்காக பாராட்டி வருகின்றனர்.

பிக் பாஸ் ரசிகர்களின் தற்போதைய டார்கெட்டே ஷிவானி நாராயணன் தான். ஷிவானி பிக் பாஸ் வீட்டில் செய்யும் விஷயங்களையும், அவர் பாலாவுடன் பண்ணும் ரொமான்ஸ் சேட்டைகளையும் வைத்து ஏகப்பட்ட மீம்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். ட்ரோல்களும் இஷ்டத்துக்கு குவிந்து வருகின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாட வந்த ஷிவானி, முழு நேரமும் பயில்வான் பாலாஜி முருகதாஸை என்டர்டெயின் பண்ணுவதை மட்டுமே வேலையாக கொண்டு இருக்கிறார் என ரம்யா பாண்டியன் சம்யுக்தாவிடம் ஷிவானி மாதிரியே நடித்து காட்டி சொன்னதை பார்த்த ரசிகர்கள், அப்படியே நம்ம மனசுல இருக்கிறத சொல்றாங்க பா என மீம் போட்டு ஷிவானியை ஓட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News