இப்பவே கண்ணை கட்டுதே!.. மாலத்தீவில் பளபள உடையில் ஷிவானி...

சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் 'பகல்நிலவு' சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து 'கடைக்குட்டி சிங்கம்' என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அதாவது, போட்டோ, வீடியோ, டான்ஸ், என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து வந்தார். அதன்பின் பிக்பாஸ் வீட்டிற்கு போய்விட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பியுள்ள நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ளார். தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ள ஷிவானி அங்கு ஜாலி ஆட்டம் போட்டு வருகிறார். அங்கு பிகினி உடையில் எடுக்கப்படும் கவர்ச்சி புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்தார்.
இந்நிலையில், பச்சை நிற பளபள உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.