×

ஜெலுசில் குடி... என்னுடைய உண்மையான வயசு இது தான் - ஷிவானி அதிரடி பதில்!

ரசிகர்களின் எடக்கு முடக்கான கேள்விக்கு பதிலளித்த ஷிவானி

 

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார். இந்நிலையில் சமீபநாட்களாகவே மாலை 5 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . இதனாலே ஷிவானியை 5 மணி பஸ் என கிண்டல் செய்து வந்தனர்.

எப்போதும் மெனக்கெட்டு கிளாமர் உடை அணிந்து ஹாட் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டு பேமஸ் ஆனா ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

shivani narayanan

இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஷிவானியிடம் ஒருவர், உங்களுக்கு 21 வயது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இது எப்படி சாத்தியம் என கேட்டதற்கு,  " உன்னால ஜீரணிக்க முடியவில்லை என்றால் ஜெலுசில் குடி எனக்கு 19 வயது தான் ஆகிறது. என்று கூறி அனைவரையும் வியப்படைய வைத்துவிட்டார். 19 வயசுல இப்படி அசுர வளர்ச்சி அடைந்திருக்கு இந்த பொண்ணு...!

From around the web

Trending Videos

Tamilnadu News