×

என்ன சீரியல்ல கூப்டாங்க.. சினமால கூப்டாங்க... என் கெரகம் பிக்பாஸில் மாட்டிகிட்டேன்!

சீரியல் நடிகையும், சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவருமான நடிகை ஷிவானி 16 போட்டியாளர்களில் ஒருவராக நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்து இருக்கிறார். 
 

டான்ஸ் வீடியோக்கள், புகைப்படங்கள் என அப்டேட்டடாக இருப்பதால், இன்ஸ்டாவில் 20 லட்சம் பேருக்கும்  அதிகமானோர் இவரை பின்தொடர்கின்றனர்.

தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்து இருக்கும் ஷிவானி அங்கும் வலிமையான போட்டியாளராக உருவெடுப்பார் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர். மேலும் அவருக்கு ஆர்மி ஆரம்பித்து வாக்குகள் சேகரிக்க ஏராளமான ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும் இன்னும் 100 நாட்களுக்கு அவர் புகைப்படங்கள் வெளியிட மாட்டாரே என்னும் வருத்தமும் ரசிகர்கள் மத்தியில் இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்குமுன் நடிகர் கமல்ஹாசனுடன் பேசுகையில் தன்னுடைய வெள்ளித்திரை பிரவேசம் குறித்து அவர் தெரிவித்து சென்றுள்ளார். படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருவதாகவும், ஆனால் ஒரு நல்ல அறிமுகத்திற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். இதனால் விரைவில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வந்தபின் அவரது வெள்ளித்திரை அறிமுகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News