மூன்று படங்கள் கைவசமிருக்கு... சீக்ரெட் உடைக்கும் ஷிவானி

பகல் நிலவு சீரியல் மூலம் கவனம் ஈர்த்த ஷிவானி, சோசியல் மீடியாக்களில் பகிரும் புகைப்படங்களுக்குத் தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருந்தார். நாலு மணி மேடம் என்று நெட்டிசன்களால் புகழப்படும் ஷிவானி, அவ்வப்போது கவர்ச்சியான போட்டோகளைப் பகிர்ந்து ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்துக் கொண்டிருந்தார்.
இடையில் பிக்பாஸ் சீசன் 4-ல் வாய்ப்புக் கிடைத்து ஷோவில் கலந்துகொண்டார். பிக்பாஸ் மூலம் தனக்கு நெகட்டிவ் ஷேட் கிடைத்திருந்தாலும், அதன் மூலம் ஷிவானிக்காக பாப்புலாரிட்டி அதிகரிக்கவே செய்திருக்கிறது. பிக்பாஸ் குறித்து பிரபல ஆங்கில ஊடகத்திடம் பேசிய ஷிவானி, `பிக்பாஸ் வீட்டில் யாருக்காகவும் நான் சமரசம் செய்துகொள்ளவில்லை. நான் நானாக இருந்தேன். சின்ன வயசுல இருந்தே படத்துல நடிக்கணும்னு ஆசை. சின்னப்புள்ளையா இருந்தப்ப பல நடிகர்கள் போல நடிச்சுக் காமிப்பேனாம்.
சினிமா வாய்ப்பு இதுக்கு முன்னாடியும் வந்துட்டு இருந்துச்சு.. ஆனால், முதல்ல பகல் நிலவு வாய்ப்பு வந்துச்சு. இப்போ மூணு படங்கள்ல நடிக்க பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு. சீக்கிரமே அது முடிவு செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்’’ என்று தம்ஸ் அப் காட்டுகிறார் ஷிவானி.