×

'குக் வித் கோமாளி' சிவாங்கி நடிக்கும் திரைப்பட போஸ்டர்.. படத்தில் இவரும் இருக்காரா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்துஆண்டு மிகவும் பிரபலமானவர் சிவாங்கி. இவர் செய்யும் சேட்டைகள், இவரது குழந்தை தனமான நடிப்பு  அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. புகழுடன் இவர் சேர்ந்து அடிக்கும் லூட்டி அனைவருக்கும் பிடித்துப்போனது.

 
cook with komali shivagi

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்துஆண்டு மிகவும் பிரபலமானவர் சிவாங்கி. இவர் செய்யும் சேட்டைகள், இவரது குழந்தை தனமான நடிப்பு  அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. புகழுடன் இவர் சேர்ந்து அடிக்கும் லூட்டி அனைவருக்கும் பிடித்துப்போனது.

இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே விஜய் டிவியில் ஓழ்ப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு ரீச் கிடைக்கவில்லை. பின்னர் இவர் கலந்துகொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

Shivabngi -sivakarthikeyan
Shivabngi -sivakarthikeyan

தற்போது இவர் சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையில் கால் பாதிக்க உள்ளார். அந்தவகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் காசேதான் கடவுளடா என்ற படத்திலும் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இனி வரும் நாட்களில் டிவி நிகழ்ச்சிகளிலிருந்து சற்று தள்ளி இருக்கலாம் என இவர் முடிவு செய்துள்ளாராம். தொடர்ந்து வெள்ளித்திரையில்  வந்துகொண்டு இருக்கும் வேலையில் சின்னத்திரையிலும் பயணித்தால் அது தன் கேரியரை பாதிக்கும் என இந்த முடிவு எடுத்துள்ளாராம். 

Shivabngi -Manobala
Shivabngi -Manobala

சமீபத்தில் இவர் காசேதான் கடவுளடா படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் இவருடன் காமெடி நடிகர் மனோ பாலாவும் இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் அவரும் இருக்கிறார் என்றால் இந்தப்படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என பேசி வருகின்றனர்.

இதில் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்துவரும் டான் படம் அடுத்த் ஆண்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News