ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ஷிவராஜ்குமார்... வெளியானது '666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்' டீசர்!

 
666 operation dream theatre

கன்னட சினிமாவில் மாஸ் காட்டி வருபவர் ஷிவராஜ்குமார். இவர் நடிப்பில் கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் உருவாகி வரும் புதிய படம் '666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்'.

இதில் முக்கிய வேடங்களில் பிரியங்கா மோகன், டாலி தனஞ்செயா, அதிதி பாலன், யாஷ் ஷெட்டி, அசோக் ஷர்மா, தக்ஷா வர்தன், வருண் குமார், அர்விந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். 

ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதை பிரபல இயக்குநர் ஹேமந்த்.எம்.ராவ் இயக்கி வருகிறார். இதற்கு சரண் ராஜ் இசையமைத்து வருகிறார்.

தற்போது, இதன் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

From Around the web