×

தளபதி ரசிகரின் இல்லத்தில் சோறு சமைத்த ஷோபா சந்திரசேகர்..

தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுப்பார் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ரசிகரின் வீட்டு திருமணமாக இருந்தாலும் சரி அல்லது ரசிகர் வீட்டில் துக்க நிகழ்வு நடந்தாலும் சரி முதல் ஆளாக தளபதி விஜய் அதில் கலந்து கொண்டு தனது  ரசிகர்களின் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் பகிர்ந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தளபதியை போலவே தளபதி விஜய்யின் பெற்றோர்களும் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மரியாதை அளித்து வருகின்றனர். நேற்று மதுரையில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் சோபா தம்பதியினர் சென்றுள்ளனர். அப்போது தற்செயலாக அவர்களை பார்த்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர், தங்களது வீட்டிற்கு வருகை தரும்படி வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட எஸ்ஏ சந்திரசேகர்-சோபா தம்பதியினர் அவரது வீட்டிற்கு சென்றனர். ஆரத்தி எடுத்து ஆரவாரமான வரவேற்பு கொடுத்த அந்த ரசிகரின் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் சாப்பிட்டு தான் செல்ல வேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டனர். இதனையடுத்து கிச்சன் உள்ளே சென்ற ஷோபா சந்திரசேகர் அந்த குடும்பத்தினரின் சமையலுக்கு தன்னுடைய உதவியையும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

சோபா சந்திரசேகர் சமையல் செய்வது, ரசிகரின் குடும்பத்தவர்களுடன் விஜய் பெற்றோர்கள் சாப்பிட்டது, செல்பி எடுத்தது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. விஜய்க்கு ஏன் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளனர் என்பது இப்போதுதான் புரிகிறது என பலர் இந்த வீடியோவுக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர்

From around the web

Trending Videos

Tamilnadu News