விஜய்தான் அடுத்த சிஎம்... திருப்பதியில் ஷோபா நம்பிக்கை.. எவ்ளோ பாசம்?
நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜயின் தாய் ஷோபா திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். இன்று அதிகாலை திருப்பதி வேங்கடாசலபதியை சாமி தரிசனம் செய்து விட்டு நிருபர்களை சந்தித்தார். எப்போதும் சிரித்த முகத்துடன் என்ன கேள்வி கேட்டாலும் முகம் சுழிக்காமல் பதில் சொல்ல கூடியவர் ஷோபா. விஜய்க்கு எப்போதும் பக்க பலமாக இருப்பவர்.
விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கும் போது கூட ஷோபாதான் பொறுமையாக இருந்து இருவருக்கும் ஒரு இணைப்பு பாலமாக இருந்தார். விஜய் கட்சி ஆரம்பித்த பிறகும் கூட விஜய் நடத்தும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஷோபா தவறாமல் கலந்து கொண்டு மகனுக்காக ஃபுல் சப்போர்ட் செய்து வருகிறார். ஆரம்பகாலங்களில் விஜய் நடித்த படங்களி்ல் விஜயும் ஷோபாவும் இணைந்து பாடலை பாடியிருக்கிறார்கள்.
விஜய் மீது ஷோபா எப்போதும் அன்பும் பாசமும் வைத்திருப்பார். ஒரு பட விழாவில் கூட விஜயிடம் என்ன கேட்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்ட போது விஜயை ஒரு முறை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று தன் ஆசையை வெளிப்படுத்தியிருப்பார். அதை விஜயும் செய்தார். மேடையிலேயே தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்றினார். தந்தையுடன் அவ்வப்போது முரண்பாடு ஏற்பட்டாலும் தாய் ஷோபா மீது இன்று வரை அதே பாசத்துடன் தான் இருந்து வருகிறார் விஜய்.
இந்த நிலையில் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த ஷோபா விஜய்தான் அடுத்த சிஎம் என்றும் தவெக தான் ஜெயிக்கும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார். எப்படியாவது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தன் மகன் ஜெயிக்கவேண்டும் என்று நினைத்து கூட இன்று திருப்பதிக்கு வந்திருப்பார் போல ஷோபா.

என்ன இருந்தாலும் ஒரு அம்மாவாக அந்த ஆசை இருக்கத்தானே செய்யும். அதே நேரம் கட்சி வேலைகளிலும் விஜய் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார். இன்று 10 சின்னங்கள் கேட்டு தவெக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டிருக்கின்றது.
