சோக்கா இருக்காரே சோபிதா துலிபாலா!.. அந்த ஷேப்புக்கே நாக சைதன்யா ஃபிளாட்டு!..

 
shobita

நாக சைத்தன்யாவின் இரண்டாவது மனைவியான நடிகை சோபிதா துலிபாலா, தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் மீண்டும் சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஃபேஷன் மற்றும் சினிமா என இரு துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள அவர், இந்த முறை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன.

தங்க நிற வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட ஆடையில் சோபிதா தோன்றியுள்ள இந்த போட்டோஷூட்டில், முதுகு திறந்த வடிவமைப்பு, நுணுக்கமான எம்பிராய்டரி அலங்காரங்கள், இடுப்பை ஒட்டிய ஆபரணங்கள் மற்றும் நீளமாக விரிந்த கூந்தலுடன் அவர் காட்சியளித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

shobi

மாடலாக தனது பயணத்தைத் தொடங்கிய சோபிதா துலிபாலா, அனுராக் கஷ்யப் இயக்கிய 'ராமன் ராகவ் 2.0' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சோபிதா, அதன் பின்னர் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் பெற்றார். மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

dulipala

அமேசான் பிரைம் வீடியோவின் 'Made in Heaven' வெப் தொடரில் தாரா கண்ணா கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றது. அதேபோல் 'The Night Manager', 'Major', 'Kurup' மற்றும் ஹாலிவுட் திரைப்படமான 'Monkey Man' ஆகிய படைப்புகளிலும் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சினிமாவில் மட்டுமல்லாமல், ஃபேஷன் உலகிலும் தொடர்ந்து புதிய தோற்றங்களால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் சோபிதா துலிபாலாவின் இந்த புதிய போட்டோஷூட் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Tags

From Around the web