×

ஷூட்டிங்கிலே குடித்து விட்டு வந்த முன்னணி நடிகர்... போதை இருந்தா தான் நடிப்பு வருமாம்...
 

நடிகர் முரளி அவர்கள் ஷூட்டிங்கிற்கே குடித்து விட்டு தான் வருவார் என குணசித்திர நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார்.
 

நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சினிமாத்துறையில் இருக்கும் சீக்ரெட்களை அவிழ்த்து வருகிறார். அதில் சமீபத்திய வரவு தான் நடிகர் முரளியின் திரை வாழ்க்கையை குறித்த சில அதிர்ச்சி தகவல்கள். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ஜூனியர் ரஜினிகாந்தாக பேசப்பட்டவர் தான் முரளி. அப்போதைய காலத்தில் எல்லா நாயகிகளுடன் நடித்த ஒரே நடிகரும் அவர் தான். கடைசி காலத்தில் அவர் குணசித்திர நடிகராக நடித்தார்.

ஆனால் தன்னுடைய சம்பளத்தை எல்லாம் குறைக்கவில்லை. இந்த விசேங்களில் நடிப்பது குறைந்த காலமே தேவைப்படும். அதனால் தான் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். நடிகர் முரளி சினிமா படப்பிடிப்புக்கு எப்போதுமே குடித்து விட்டு தான் வருவாராம். கண்கள் சிவந்து முழு போதையில் வந்தால் தான் நடிக்க முடியும் என நம்பினார். போதையால் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் எனப் பிரச்சனை செய்தார். அவரை தட்டிக் கொடுத்து தான் சில இயக்குனர்கள் வேலை வாங்கி கொண்டனர். 

அவருக்கு வாய்ப்பு குறைந்ததற்கும் குடி தான் ஒரு மிகப்பெரிய காரணம். முரளி மாதிரி அதர்வாவும் நல்ல நடிகர் தான். ஆனால் அவரும் தந்தை மாதிரி முழு போதையில் தான் இருக்கிறார். பெண்கள் விஷயத்தில் அவருக்கு நல்ல பெயர் இல்லை. முரளி காதலித்த நடிகையை கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் அதர்வா தன்னுடன் நடித்த எல்லா நடிகைகளையும் காதலிக்கிறார். ஆனால், யாரையும் கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை எனக் கூறி இருக்கிறார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News