அமித் பார்கவ் பெண்ணுக்கு இப்படி ஒரு நோயா? ஷாக்கான சீரியல் ரசிகர்கள்...

விஜய் டிவியில் பிரபலமான சீரியலான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்தவர் அமித் பார்கவ். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், அவருக்கு நோய் ஒன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கன்னடாவில் ஒளிபரப்பான சீதே சீரியலில் ராமனாக நடித்து புகழ் பெற்றவர் அமித் பார்கவ். அதை தொடர்ந்து தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக நடித்தார். முதல் தமிழ் சீரியலே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

தமிழில் மகாபாரதம் சீரியலில் கிருஷ்ணாவாக நடித்திருப்பார். கன்னடா பிக்பாஸ் முதல் சீசனின் குரல் இவருடையது தான். இருந்தும் தமிழில் சீரியல் ஹிட்டடிக்க தொடர்ந்து தமிழ் பக்கம் தன் கவனத்தினை திருப்பினார். விஜய் தொடங்கி சன் டிவி, கலைஞர், ஜீ தமிழ் உள்ளிட்ட பிரபல டிவிகளின் சீரியலில் நடித்து வந்தார்.

இதை தொடர்ந்து, மிருதன், என்னை அறிந்தால் படங்களிலும் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார். தற்போது ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிப்பரப்பாகி வரும் ஹார்ட்பீஸ்ட் வெப்சீரிஸில் முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார். இவர் தன்னுடைய சக நடிகையான சிவரஞ்சனியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இத்தம்பதிக்கு 2019ம் ஆண்டு மகள் பிறந்தார். நான்கு வயதாகும் அமித் பார்கவ் மகளுக்கு ஆட்டிசம் குறைப்பாடு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தன் மகளுக்கு அந்த பிரச்னை இல்லை என அமித் பார்கவ் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவருக்கு எக்கோலாலியா என்ற நோய் தான் இருக்கிறது.

அந்த நோயால் அவளால் எளிதில் எதையும் சீக்கிரம் புரிந்துக்கொள்ள முடியாது மற்றப்படி அவளுக்கு வேறு பிரச்னை இல்லை. நன்றாக இருக்கிறாள். அவளுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்காமல் நான் பார்த்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். இதைக்கேட்ட அமித் ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles

Next Story