×

3 வயது மகள் மோகன் ராஜாவிடம் கேட்ட அதிர்ச்சி கேள்வி - வாயடைக்க வைத்த தருணம்

தமிழ் சினிமாவின் திரைநட்சத்திர குடும்பளங்களில் ஒன்றான ஜெயம் ரவியின் குடும்பத்தில் அப்பா மோகன் எடிட்டர்,  அண்ணன் மோகன் ராஜா இயக்குனர் என குடும்பத்தில் அனைவரும் திரைத்துறையில் இருப்பவர்கள். ஜெயம் ரவி ஆர்த்தி என்ற பெண்ணை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரவ் ரவி , அயான் ரவி என இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

இதே போன்று அண்ணன் மோகன் ராஜா வரலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்று, மூன்று வயது நிரம்பிய என்‌ மகளுக்கு சாமி கும்பிட கற்றுக்கொடுத்தோம்‌. கடவுளை பார்த்து இரு கரம்‌ கூப்பி, அம்மா நல்லா இருக்கணும்‌, அப்பா நல்லா இருக்கணும்‌, எல்லாரும்‌ நல்லா இருக்கணும்னு வேண்டிக்கமா என்றோம்‌.

அவளும்‌ சொல்லிக்கொடுத்தது போலே அம்மா நல்லா இருக்கணும்‌, அப்பா நல்லா இருக்கணும்‌, தாத்தா நல்லா இருக்கணும்‌, பாட்டி நல்லா இருக்கணும்‌, அத்தை மாமா நல்லா இருக்கணும்‌, சித்தப்பா நல்லா இருக்கணும்‌' என கூறி தொடர்ச்சியாக சொல்லாத ஒன்றையும்‌ கூறினாள்.‌

'சாமி நல்லா இருக்கணும்‌: சரி தானே ! நம்மை காப்பாற்ற சாமி இருக்கு நம்மிடமிருந்து சாமியை காப்பாற்ற யார்‌ இருக்கா ? என தன் மகள் கேட்ட கேள்வியை மோகன் ராஜா ட்விட்டரில் பதிவிட்டு மூன்று வயது குழந்தையின் சிந்தனை எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளார். இந்த பதிவு வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News