பாத்ரூம் tap சரியா வேலை செய்யலைனு சூட்டிங் கேன்சலா? தாங்கமுடியாத நடிகரின் அட்டூழியம்
திரைத்துறையை பொறுத்தவரைக்கும் நடிகைகள்தான் ஒன்றுக்குமே ஆகாத ஒரு விஷயத்திற்காக கோபப்பட்டு சூட்டிங்கை கேன்சல் செய்து போய்விடுவார்கள். அதற்கு ஒரு உதாரணமாக நடிகை நிலா .இவர் அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவரை ஒரு படத்திற்காக ஒப்பந்தம் செய்ய அந்தப் படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கிக் கொண்டிருந்தார்களாம். அதுவும் தியாகராஜன் தயாரிப்பில் அந்தப் படம் உருவாகிக் கொண்டிருந்ததாம்.
குளிக்கும் மாதிரியான காட்சிகளில் நடிக்க எனக்கு மினரல் வாட்டர்தான் வேண்டும் என அடம்பிடித்து அந்தப் படப்பிடிப்பையே ரத்து செய்து போய்விட்டார் நிலா. இதே போல் இன்னும் ஒரு சில நடிகைகள் தன் தேவையில் ஏதாவது குறை ஏற்படும் போது தயாரிப்பாளர்களின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் சூட்டிங்கை கேன்சல் செய்திருக்கின்றனர். ஆனால் இதில் ஒரு சில நடிகைகள் ஆடை மாற்றும் வசதி இல்லை என்றாலும் நான்கு பேரை சேலையை சுற்றி பிடித்துக் கொண்டு அதற்குள் நின்று தன் உடைகளை மாற்றியுள்ளனர். இப்படியும் ஒரு சில நடிகைகள் இருக்கத்தான் செய்கின்றனர்.
இதில் நடிகைகள் மட்டுமா இப்படி என்றால் நடிகர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நடிகர்களுக்கு காட்ஃபாதரே கார்த்திக்தான். அவரால் பல தயாரிப்பாளர்கள் விரக்தியடைந்திருக்கின்றனர். ஆனால் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டால் கார்த்திக்கை மாதிரி யாரும் அந்தளவுக்கு டெடிகேஷனாக இருக்க முடியாது. ஆனால் அவரை சூட்டிங்கிற்கு அழைத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
கொடுத்த கால்ஷீட்டிற்குள் வர மாட்டார். அவரிடம் பணத்தை கொடுத்தால் திரும்ப பெறுவதும் கஷ்டம் என இந்த மாதிரி பல விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் சுபேர் ஒரு நடிகரை பற்றி ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அந்த நடிகரின் பெயரை குறிப்பிடவில்லை. இப்போதுள்ள இளம் தலைமுறை நடிகராம். மதுரையில் சூட்டிங்காம்.
அதனால் அங்கு ஒரு பெரிய ஓட்டலில் அவருக்கு அறை எடுத்து தங்க வைத்திருக்கின்றனர். அந்த ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூம் குழாய் சரியாக வேலை செய்யவில்லையாம். உடனே அந்த நடிகர் சம்பந்தப்பட படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்து இங்கு குழாய் வேலை செய்யவில்லை. அதனால் நான் சென்னைக்கே வந்துவிடுகிறேன் என டிக்கெட் போட சொல்லி சென்னைக்கு வந்துவிட்டாராம். இப்படியான நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று சுபேர் கூறியுள்ளார்.
