×

கல்யாணமா... என்ன பேசுறீங்க... நடிகையின் ரியாக்‌ஷன்

திருமணம் குறித்த கேள்விக்கு பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் அளித்த பதில் வைரலாகி வருகிறது. 
 

பிரபாஸுடன் `சாஹோ’ படத்தில் நடித்தவர் ஸ்ரத்தா கபூர். வாரிசு நடிகையாக இருந்தாலும், தனது தனித்த நடிப்புத் திறமையால் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ஸ்ரத்தா. பாலிவுட் மட்டுமல்லாது இந்திய அளவில் பல்வேறு திரைத் துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர். 

இவரது திருமணம் குறித்த செய்திகள் கடந்த 2 ஆண்டுகளாகவே றெக்கை கட்டிப் பறக்கின்றன. தனது ஸ்கூல்மேட்டும் பிரபல ஃபேஷன் ஃபோட்டோகிராபருமான ரோஹன் ஸ்ரெஸ்தாவைத் திருமணம் 2021-ல் திருமணம் செய்துகொள்ளப் போவதாகத் தகவல் வெளியானது. ஆனால், இந்தத் தகவல்கள் அனைத்தும் வதந்திகளாகவே சுற்றிவருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. 

இந்தநிலையில், மும்பை விமான நிலையத்தில் ஸ்ரத்தாவிடம் போட்டோகிராஃபர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அந்தக் கேள்விக்கு சிரித்துக் கொண்டே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று மராத்தியில் பதிலளித்துவிட்டு அங்கிருந்து ஸ்ரத்தா நகர்ந்துவிட்டார். அவரது ரியாக்‌ஷன் வீடியோ வைரலாகி வருகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News