×

குட்டி குவா குவா பாப்பாவை அறிமுகம் செய்த ஸ்ரேயா கோஷல்..

முதன்முறையாக தனது கணவருடன் இணைந்து மகனின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் ஸ்ரேயா.
 
154491-tfljvlgxpw-1612684598

பாடகி ஸ்ரேயா கோஷல் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். இவரது குரலில் வந்த எந்த பாடலும் வெற்றியடையாமல் இருந்தது இல்லை.

ஹிந்தியை தாண்டி வேறு எந்த மொழியும் இவருக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என எந்த மொழியில் பாடல்கள் கொடுத்தாலும் ஒரு பிழையும் இல்லாமல் பாடுவார்.

அதுவும் அவரிடம் உள்ள மிகப்பெரிய சிறப்பு. அண்மையில் இவர் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற செய்தியை வெளியிட்டார்.

அவ்வப்போது நிறைய புகைப்படங்களாக ஷேர் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மே 22ம் தேதி ஸ்ரேயாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது முதன்முறையாக தனது கணவருடன் இணைந்து மகனின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் ஸ்ரேயா.


 

From around the web

Trending Videos

Tamilnadu News