Categories: Cinema News latest news

எத்தனை பேர் வந்தா என்னா? நீதான் ஹாட்!.. சொக்க வைத்த நடிகை ஸ்ரேயா….

சில படங்களில் நடித்திருந்தாலும், ஜெயம் ரவி நடித்த ‘மழை’ பபடத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் ஸ்ரேயா. அதன்பின் அவர் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்த முன்னணி நடிகையாக மாறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், திருமணத்துக்கு பின் தனது கணவருடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார்.

மேலும், ஸ்ரேயா அவ்வப்போது சமூக வலைதங்களில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சில சமயம் கணவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில், தங்கம் போல் ஜொலிக்கும் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா