×

அம்மா - அப்பா பிரிஞ்சது எனக்கு சந்தோஷம்தான் : இப்படி சொல்லிட்டாரே ஸ்ருதிஹாசன்!

 
kamal

நடிகர் கமல்ஹாசனும், அவரின் மனைவி சரிஹாவும் 1988ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அதற்கு முன்பே ஸ்ருதிஹாசன் பிறந்துவிட்டார். அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக 2004ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

கமல் - சரிஹா தம்பதிக்கு ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா என 2 மகள்கள் உள்ளனர். தற்போது இருவருமே சினிமாவில் ஒரு இடத்தை பிடித்துள்ளனர். 

kamal

இந்நிலையில், சமீபத்தில் ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டியில் ‘ இணைந்து வாழ முடியாது என் அப்பா, அம்மா இருவரும் முடிவெடுத்த பின் ஏதோ ஒரு காரணத்திற்காக சேர்ந்து வாழ முடியாது. அவர்கள் வாழ நினைத்த வாழ்க்கைக்காக இருவரும் பிரிந்து சென்றது எனக்கு மகிழ்ச்சியே. அதேநேரம், எனக்கும், என் தங்கைக்கும் அவர்கள் நல்ல பெற்றோர்களாக இருக்கிறார்கள். ஒன்றாக இருந்த போது அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. ஆனால், தற்போது அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்’ என அவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News