நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 7ம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஸ்ருதிஷாசன் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் ரார்சேல் உடனான காதல் பிரேக் அப் ஆன நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை தற்போது காதலித்து வருகிறார். அவர் ஒரு ஓவியர் ஆவார். ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மும்பையில் அவருடன்தான் தங்கியிருக்கிறார். அதோடு, அவரோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், காதலனுடன் விளையாடும் ஒரு விளையாட்டை வீடியோவாக ஸ்ருதி வெளியிட்டுள்ளார். அதாவது, முதலில் யார் ஐ லவ் யூ சொன்னது?.. யார் அதிகமாக பணத்தை செலவழிப்பது?.. யார் முதலில் தூங்க செல்வார்? போன்ற கேள்விக்கு உண்மையாக பதிலளிக்கும் விளையாட்டு அது..
இந்த வீடியோவுக்கு ஸ்ருதியும், அவரின் காதலரும் பதில் கூறும் அந்த வீடியோ நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…