×

விஜய் சேதுபதியுடன் நடிக்க மாட்டேன் - படப்பிடிப்பிலிருந்து தெறித்து ஓடிய ஸ்ருதி ஹாசன்

 

நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் தனது நண்பர்கள் மற்றும் படப்பிடிப்பில் தன்னை காணவரும் ரசிகர்களிடம் அதிக அன்பு காட்டுவர். ரசிகர்களை கட்டிப்பிடித்து முத்தமெல்லாம் கொடுப்பார். இது அவர் வழக்கமாக செய்யும் ஒன்றுதான். தற்போது இதுவே அவருக்கு ஒரு பிரச்சனையை கொண்டு வந்துள்ளது.

தற்போது ஜனநாதன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் லாபம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில், அவரும், ஸ்ருதிஹாசனும் இணைந்து நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு அவர் காண சில ரசிகர்கள் வந்துள்ளனர். வழக்கம் போல் அவர்களுக்கு கை கொடுத்து, கட்டிப்பிடித்து செல்பிக்கெல்லாம் போஸ் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி, இதைக்கண்ட ஸ்ருதிஹாசன் கடுப்பாகி விட்டாராம்.

கொரோனா பரவல் இருக்கும் இந்த சூழ்நிலையில், இவர் இப்படி மற்றவர்களுடன் நெருக்கமாக பழகிவிட்டு என்னுடன் வந்து நடித்தால் எனக்கு கொரோனா வந்தால் என்ன செய்வது என இயக்குனரிடம் எகிறிவிட்டு ‘இவருடன் நான் நடிக்க மாட்டேன்’ எனக்கூறிவிட்டு படப்பிடிப்பிலிருந்தே சென்றுவிட்டாராம்.

தற்போது அவரை சமாதானப்படுத்தி படப்பிடிப்பிற்கு அழைத்து வரும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

என்னடா விஜய்சேதுபதிக்கு வந்த சோதனை!....

From around the web

Trending Videos

Tamilnadu News