×

ஸ்ருதிஹாசன் வாழ்வில் பல ஆண்கள்!... அப்பாவை ஓவர்டேக் செய்யும் காதல் கதைகள்....

 
shruthi

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இசை, பாடல் பாடுவது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செய்வது என ஜாலியாக சுற்றிக்கொண்டிருந்தவர் சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். அதன்பின் மெல்ல மெல்ல உயர்ந்து அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார். தெலுங்கிலும் கால் பதித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். ஒருபக்கம் பாலிவுட் பக்கமும் சென்று படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடினார். 3 மொழிகளிலும் மார்க்கெட் உள்ள நடிகை ஸ்ருதிஹாசன் மட்டுமே. 

shruthi

ஒருபக்கம் ஸ்ருதிஹாசன் தன் வாழ்வில் கடந்து வந்த காதல் கதைகளுக்கும் பஞ்சமில்லை. முதன் முதலாக அவர் காதலில் விழுந்தது நடிகர் சித்தார்த்திடம். அவரும், சித்தார்த்தும் தெலுங்கு படங்களில் இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டது. ஹைதராபாத்தில் லிவ்விங் டூ கெதரிலும் இருந்தனர். 

siddharth

அடுத்து நடிகர் தனுஷ்.. இத்தனைக்கும் தனுஷ் அப்போது திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகி குழந்தையே இருந்தது. தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்தில் தனுஷும், ஸ்ருதிஹாசனும் மிகவும் நெருக்கமாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் கெமிஸ்ட்ரி பற்றிக்கொண்டது. அதன்பின், ரஜினி இதில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து இருவரையும் பிரித்து வைத்தார்.

danush

அதன்பின், இங்கிலாந்தை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். இருவரும் சில வருடங்கள் காதலித்தனர். இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி திரிந்த புகைப்படங்களும் வெளியானது. இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு பிரிந்தனர். 

shruthi

தற்போது ஸ்ருதிஹாசனின் பாய் ஃபிரண்டாக இருப்பவர் சாந்தனு ஹசரிகா. இவர் ஒரு ஓவியர். மும்பையில் அவருடன் லிவ்விங் டூ கெதரில் இருக்கிறார் ஸ்ருதிஹாசன். இவருடனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். ஸ்ருதியின் வயிற்றில் அவர் ஓவியம் வரைந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை அதிர வைத்தது.

shruthi

ஸ்ருதிஹாசனின் தந்தை கமல்ஹாசனே ஒரு பெரிய காதல் மன்னன். வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து பின் விவாகரத்து செய்தார். பின், சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பிறந்தவர்கள்தான் ஸ்ருதியும், அக்‌ஷராவும். அதன்பின் அவரையும் பிரிந்து கவுதமியுடன் லிவ்விங் டூ கெதரில் இருந்தார். அவரும் பிரிந்து விட தற்போது தனிமையில் வசிக்கிறார். ஆனாலும் விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜா, ஆண்ட்ரியா என அவரின் காதல் லீலைகள் அவ்வப்போது வெளியே கசிந்து வருகிறது.

ஆனால், ஸ்ருதிஹாசன் செல்லும் வேகத்தை பார்த்தால் அப்பாவை ஓவர்டேக் செய்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.  
 

From around the web

Trending Videos

Tamilnadu News