நான் உனக்கு அம்மாவா?.. திடீரென டென்ஷனான ஸ்ருதிஹாசன்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்ம்மா!..
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்ற நடிகை ஸ்ருதிஹாசனை சந்தித்த பாப்பராஸிகள் போட்டோ எடுப்பதற்காக மேடம் ஒரு போஸ் என சொல்லி போட்டோ எடுப்பது வழக்கம். விமான நிலையத்திலேயே பலர் குடிகொண்டு பிரபலங்கள் வந்து இறங்கியதும் போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்து வருகின்றனர்.
நடிகை ஸ்ருதிஹாசன் வந்து இறங்கிய நிலையில், பாப்பராஸி ஒருவர் அம்மா ஒரு நிமிஷம் என சொல்ல, யார் நான் உனக்கு மம்மாவா என இந்தியில் பேசி அவரை திட்டி விளாசி விட்டார். அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பெண்களை அம்மா, அக்கா, மேடம் என அழைப்பதில் ஒன்றும் தவறில்லையே, ஆன்ட்டின்னு கூப்பிட்டுருந்தா டென்ஷன் ஆகலாம். இதற்கெல்லாமா போய் திட்டுவாங்க, தமிழ்நாட்டில் நான் தான் அண்ணன், நான் தான் அப்பா என பலரும் உறவு கொண்டாடி வருகின்றனர் தேர்தலுக்காக, இந்த நேரத்தில் இவர் இப்படி கோபப்படுகிறாரே என கலாய்த்து வருகின்றனர்.
இதுவே சினிமா பிரபலங்கள் அழைத்தால் ஸ்ருதிஹாசன் சிரித்துக் கொண்டிருப்பார். ஆனால், சாதாரண மனிதர்கள் அழைத்தால் இப்படித்தான் சீறி விழுவார் என்று திட்டத் தொடங்கியுள்ளனர்.
நடிகை ஸ்ருதிஹாசன் 6முறை காதலித்து காதலில் தோற்றுவிட்டேன் என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் மற்றும் இளைய மகளான அக்ஷரா ஹாசன் இருவருக்குமே இன்னமும் திருமணம் ஆகவில்லை என்பது கூடுதல் தகவல்.
கூலி படம் தோல்வியை சந்தித்த பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் ஹைதராபாத் மற்றும் மும்பை என சுற்றி வருகிறார் ஸ்ருதிஹாசன். தமிழில் கடைசியாக சாய் அபயங்கர், கயாடு லோஹர் நடனமாடிய பவழமல்லி பாடலை பாடியிருந்தார். விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் நடித்த ட்ரெயின் படமும் மிஷ்கினின் பிசாசு 2 படத்தை போல ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
