15 கோடி கொடுக்கணும்!.. திடீரென பஞ்சாயத்தைக் கூட்டிய ஸ்ருதிஹாசன்!.. கமல் மகளுக்கு என்ன ஆச்சு?..

 
sruti

AI உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், பிரபலங்களின் பெயர், புகைப்படம், குரல் போன்றவை அனுமதியின்றி பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன், தனது உரிமைகளை பாதுகாக்கக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், தனது அனுமதியின்றி பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன், போலி விளம்பரங்களும் வெளியிடப்படுவதாக ஸ்ருதி ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது அடையாளத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், அவர்களிடம் இருந்து ரூ.15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடவும் நீதிமன்றத்தை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள 'ட்ரெயின்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஸ்ருதி ஹாசன் தொடர்ந்துள்ள இந்த வழக்கு, பிரபலங்களின் ஆளுமை உரிமை மற்றும் டிஜிட்டல் அடையாள பாதுகாப்பு தொடர்பான முக்கிய வழக்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. முன்னதாக ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பிரபலங்கள் இதே போல வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web