Categories: Cinema News latest news

கமல் மகளுக்கு அந்த ஏரியாவில் டிமாண்ட் அதிகம் போல.! ஹே என்கூட ஒரு தடவை.!

தமிழ் சினிமாவில் சூர்யா நடித்து முருகதாஸ் இயக்கத்தில் வெளியான பிரமாண்ட திரைப்படமான 7ஆம் அறிவு திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷ்ருதிஹாசன். அதன்பிறகு 3, பூஜை, சிங்கம் 3,லாபம் என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தெலுங்கில் இவருக்கு அதிக மார்க்கெட் உள்ளது. ஏற்கனவே தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் தொடர்ந்து 3 திரைப்படங்களில் நடித்து விட்டார். அதன்பிறகு பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் அடுத்த ஆக்ஷன் திரைப்படமான சலார் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மேலும் தெலுங்கு முன்னணி நடிகரும், நெட்டிசன்களின் பேவரைட் என அழைக்கப்படும் பாலகிருஷ்ணாவுடன் ஒரு புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சூப்பர் ஹிட் இயக்குனர் கோபிசந்த் மல்லேனி இயக்குகிறார்.

அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் ஒரு புதிய படத்தில் தற்போது ஸ்ருதிஹாசன் கமிட்டாகியுள்ளாராம். இந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்களேன் – எதோ பிளானோட தான் வந்திருக்கார் போல.! கவினை கண்டு மிரளும் விஜய் ரசிகர்கள்.!

தமிழில் இவருக்கு மார்க்கெட் இல்லை என்றாலும், தெலுங்கில் இவர் தான் இப்போதைய அதிக டிமாண்ட் உள்ள நடிகை. அங்குள்ள அனைத்து பெரிய ஹீரோக்களும் தங்கள் உடன் ஒரு படத்திலாவது ஸ்ருதி ஹாசன் நடித்து விட வேண்டும் என்று குறிக்கோளுடன் சுற்றி சுற்றி வருகிறார்கள் போல. பெரும்பாலும் அனைத்து பெரிய ஹீரோ படங்களிலும் ஸ்ருதிஹாசன் நடித்து விட்டார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றே கூற வேண்டும்.

Manikandan
Published by
Manikandan