Categories: Cinema News latest news

கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனை நினைவிருக்கிறதா.?! பாவம் அவர் இப்போ என்ன செய்றார் பாருங்க..

ஒருகாலத்தில் கமல்ஹாசன் அதிகமான திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த சமயத்தில் கமலை விடகமல் குடும்பத்தில் அதிகம் பேசப்பட்டவர் என்றால் அது கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தான். தனது முதல் படமான ஏழாம் அறிவு எனும் திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

அதன் பின்னர் தனுஷ், விஜய், விஷால் என பல்வேறு நடிகர்களுடன் நடித்து வந்தாலும் தெலுங்கில் பவன் கல்யான் உடன் தொடர்ந்து நடித்தும், மேலும் சில முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் ஸ்ருதிஹாசன்.

ஆனால், ஏனோ சில காரணங்களால் தற்போது சரியான படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். அவர் நடிக்கும் திரைப்படங்கள் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் அண்மைக்காலமாக வந்தபோது தெரியவில்லை. அவர் நடித்து வரும் பிரமாண்ட திரைப்படமான பிரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படம் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்களேன் – நாய்க்குட்டி மேல் அதீத அன்பு வைக்கும் கனவு கன்னிகள்… திரிஷா, சமந்தா முதல் கீர்த்தி சுரேஷ் வரை…

தற்போது வெளியான தகவலின்படி, யாமிருக்க பயமே எனும் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் டிகே அவர்கள் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளாராம். இதனை கேட்டவுடன் சினிமாவாசிகள் பலர் இந்த படம் கண்டிப்பாக OTTயில் தான் வெளியாகும் என கூறி வருகின்றனர். அந்த படம் முடிந்த பிறகு தான் இது OTT-யா அல்லது தியேட்டர் வெளியிடா என்பது தெரியவரும்.

Manikandan
Published by
Manikandan