#image_title
கமலஹாசன் குறித்து யாருக்கும் தெரியாத சில விஷயங்களை நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கின்றார்.
கமல்ஹாசன்: தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை சினிமாவில் நடித்து அசத்தி வருகின்றார். அவருக்கு 70 வயது ஆகின்றது. கற்பதற்கு வயது முக்கியமில்லை என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றார். தற்போது அமெரிக்காவில் ஏஐ டெக்னாலஜியை படிப்பதற்காக சென்று இருக்கின்றார்.
இதையும் படிங்க: Sivakarthikeyan: எஸ்கே மனைவியின் காதலனை வில்லனாக களமிறக்கும் SK25 படக்குழு… உங்களுக்கு மனசாட்சி இல்லையாப்பா?
ஸ்ருதிஹாசன்: தமிழ் சினிமாவில் கமலஹாசன் அவர்களின் மகள் என்று அடையாளத்துடன் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருந்தாலும் ஏழாம் அறிவு திரைப்படம் தான் இவரை மக்களிடையே கொண்டு சேர்த்த திரைப்படம். அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தமிழை காட்டிலும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது தனது தந்தை குறித்து யாருக்கும் தெரியாத சில விஷயத்தை பகிர்ந்து இருக்கின்றார்.
கமல்ஹாசனின் பழக்கம்: கமல்ஹாசன் குறித்து ஸ்ருதிஹாசன் தெரிவித்ததாவது:’ அப்பாவை பற்றி யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் சொல்றேன். அப்பா டெக்ஸ்ட் செய்யும் போது அதிகம் எமோஜியை தான் பயன்படுத்துவார். மீன் எமோஜி, ஏலியன் எமோஜி எல்லாம் பயன்படுத்துவார். நான் லவ் யூ அப்பா அப்படின்னு மெசேஜ் அனுப்புறேன் என்றால் அதுக்கு அவரு லவ் யூ எல்லாம் சொல்ல மாட்டாரு பிளசிங் எமோஜி அனுப்புவார்.
நான் அவரோட படத்தின் டிரைலரை பார்த்துட்டு நல்லா இருக்கு அப்படின்னு மெசேஜ் போட்டா கூலிங் கிளாஸ் எமோஜி அனுப்புவார். இப்படி எதையுமே வார்த்தைகளால் அனுப்ப மாட்டார். நிறைய எமோஜி பயன்படுத்தக்கூடிய ஒரு நபர், நான் மட்டும் இல்ல அக்ஷராவும் மெசேஜ் அனுப்புனா இப்படித்தான் பண்ணுவாரு. அவர்கிட்ட இருந்து வார்த்தையை வாங்குவது என்பது ரொம்ப கஷ்டம் , எதுக்கு எடுத்தாலும் செய்கை மட்டும் தான் என்று பகிர்ந்து இருந்தார்.
இதையும் படிங்க: SK Vs Kavin: சிவகார்த்திகேயனுக்கும், கவினுக்கும் என்ன பிரச்சனை? ஒரே நாள்ல படத்தை விட்டது இதுக்குத்தானா?
ரசிகர்கள் ஆச்சிரியம்: கமலஹாசனின் இந்த பழக்கத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் 70 வயதானாலும் தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு சமமாக நடந்து கொள்கின்றார். எங்களுக்கு தெரிந்து 70 வயது நபர் ஒருவர் எமோஜியை அதிகம் பயன்படுத்துகிறார் என்றால் அது ஆண்டவர் மட்டும் தான். புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் எப்போதும் ஆர்வமுடன் இருக்கும் நடிகர் கமல்ஹாசன் இதை மட்டும் விட்டு வைக்கவா போகின்றார் என்று கூறி வருகிறார்கள்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…