Categories: Cinema News latest news

ஆண்கள் பாலியல் தொல்லை கொடுக்கிறாங்க…ரெம்ப கஷ்டமா இருக்கு… அதிர்ச்சி தகவல் கூறிய கமல் மகள்.!

நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். தற்போது அசாம் மாநிலத்தை சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை தற்போது காதலித்து வருகிறார். அடிக்கடி இவர்கள் இருவரும் எடுத்துக்கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்பொது, இவரது கையிருப்பில் சில படங்கள் உள்ளது. அதில், பிரபாஸ் நடிக்கும் சலார், சிரஞ்சீவிக்கு ஜோடியாக வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் ஒரு புதிய படம் என பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ருதிஹாசன், சினிமா துறையில் தொடங்கி எல்லா தொழில் துறையிலும் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது என காட்டத்துடன் பேசியுள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், நம் நாட்டில் பெண்கள் வேலை செய்வதற்கு தயங்குகிறார்கள். முக்கியமாக, தமிழ் பெண்கள் திரையுலகிற்குள் நுழைவதற்குள் பெரும் படு பட வேண்டியதாக இருக்கிறது.

இதையும் படிங்களேன் – அஜித் ரசிகர்கள் ரெம்ப பாவம்யா… படக்குழு மெத்தனம்.. AK-61 ரிலீஸ் எப்போ தெரியுமா.?!

பெண்கள் ஏன் இப்படி தயங்குகிறார்கள் என்ற காரணத்தை கண்டறிய வேண்டும். இந்த முழு சொசைட்டியும் ஆணாதிக்கத்தால் நிரம்பி உள்ளது. இது தான் உண்மை, எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் அதில் ஆணாதிக்கம் காரணமாக பெண்கள் தவிர்க்க படுகிறார்கள் மேலும், பாலியல் தொந்தரவுக்கும் ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

இதையெல்லாம், தாண்டி பெண்கள சாதிக்க வேண்டிய நிலைமை இங்கு உள்ளது. தற்போது, எனக்கு நல்ல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது, ஆக்சன் படமாக இருந்தாலும் அதில் நல்ல கதாபாத்திரம் எனக்கு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். இவர் காட்டத்துடன் பேசிய இந்த பேட்டி இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

shruti hassan

Manikandan
Published by
Manikandan