குட்டி பையனுடன் சுட்டித்தனமாக கொஞ்சி விளையாடும் ஸ்ருதி ஹாசன்!
நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட செம கியூட் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்..!
Wed, 17 Mar 2021

சிறந்த பாடகி, நடிகை , தொகுப்பாளினி என பன்முக திறமைகளை கொண்டவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர்
தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார்.
அஜித், விஜய் , சூர்யா , தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெருமளவில் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். சினிமா துறையில் மிகப்பெரும் ஆளுமை திறன் கொண்ட நடிகர் கமல் ஹாசன் மகள் என்றதன் அடிப்படையில் ஸ்ருதி சினிமாவில் நுழைந்தாலும் அந்த பந்தா காட்டாமல் தொடர்ந்து தனது திறமையாலே புகழை அடையவேண்டும் என முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில் அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கங்களில் எதையேனும் பதிவிட்டு வரும் ஸ்ருதி ஹாசன் தற்போது குட்டி பையனுடன் சேட்டை செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.