கமல் - ரஜினி இணையும் 'KHxRK' படத்தில் நடிக்கவுள்ளாரா ஸ்ருதிஹாசன்?... அவரே சொன்ன தகவல்!
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான 'உலக நாயகன்' கமல்ஹாசனும், 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தும் 47 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கப்போகும் படம் 'KHxRK Reunion'.
இந்த படத்தை 'பீஸ்ட், டாக்டர், ஜெயிலர்' போன்ற படங்களின் இயக்குநர் நெல்சன் தான் இயக்கவிருக்கிறார். இதை 'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி மிக பிரம்மாண்டமாக தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
ஏற்கனவே, இதன் ப்ரோமோ வெளிவந்து ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவலை உச்சத்துக்கு கொண்டு சென்றது. நெல்சன் ரஜினியை வைத்து இயக்கி வரும் 'ஜெயிலர் 2' படத்தின் ரிலீஸுக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுமாம்.
தற்போது, கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் மீடியாவுக்கு கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றில் "அப்பாவும், ரஜினி சாரையும் சமீபத்தில் தான் நேரில் சந்தித்து பேசினேன். ஆனா, நான் இதுல நடிக்கல. ரஜினி சாரோட 'கூலி' படத்துல நடிச்சதுக்கு அப்புறம், நான் அவரோட ரசிகை ஆகிட்டேன். ரசிகர்களை போல நானும் 'KHxRK' படத்துக்காக ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்று கூறியுள்ளார்.
