சத்தியமா அப்படிச் சொல்லலை... சர்ச்சைக்கு விளக்கம் சொன்ன ஸ்ருதிஹாசன்

கன்னடத் திரையுலகில் பிரபாஸின் சலார் படம் மூலம் கால்பதிக்க இருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். இந்தப் படத்தை கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்தத் தகவல் வெளியானது முதலே இயக்குனர் பிரசாந்த் நீலை கன்னட நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.
காரணம் சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னடத் திரையுலம் குறித்து ஸ்ருதி டிவிட்டரில் தெரிவித்த கருத்துதான் என்கிறார்கள். இப்போது இயக்குனரை விட்டு விட்டு ஸ்ருதிக்கு எதிராகக் கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.
அந்த ட்வீட்டில், கன்னடத் திரையுலகத்தைச் சுத்தமாகத் தனக்குப் பிடிக்காது என்றும், அதனாலேயே அங்கு வந்த வாய்ப்புகள் பலவற்றையும் தட்டிக் கழித்தேன் என ஸ்ருதி கூறியதாக பழைய ட்வீட்டுகளை எடுத்து நெட்டிசன்கள் கொதிப்போடு கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில், சர்ச்சைக்கு ஸ்ருதி விளக்கம் கொடுத்திருக்கிறார். `என்னுடைய கருத்துத் திரித்துக் கூறப்பட்டிருக்கிறது. தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. கன்னடத் திரையுலகத்தில் இருக்கும் ஒவ்வொரு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது’ என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஸ்ருதி.