×

எனக்கு வலி நிவாரணியே அதுதான்... மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் தனது கரியர் குறித்து மனம்திறந்து பேசியிருக்கிறார். 
 
 
எனக்கு வலி நிவாரணியே அதுதான்... மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

நடிகரும் அரசியல்வாதியுமான ஸ்ருதிஹாசன் வாரிசு நடிகையாக அறிமுகமானாலும், தனது தனித் திறமைகளால் கோலிவுட் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் முத்திரை பதித்திருக்கிறார். 


நடிகை மட்டுமே என்றில்லாமல் பாடுவது, இசையமைப்பது போன்ற பணிகளிலும் திறம்பட செயல்பட்டு வருகிறார். அவரது தந்தை கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படம் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராகவும் நிலைநிறுத்திக் கொண்டார்.

இதுதவிர கதை, திரைக்கதை எழுதுவதிலும் தமக்கு ஆர்வம் இருப்பதாக ஸ்ருதி குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்ட ஸ்ருதி ஹாசன், ``நான் பாடல்கள் எழுதுகிறேன். கவிதை எழுதுகிறேன். சோகமாக இருக்கும்போது அதுதான் நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகின்றன. கடுமையான ஷெட்யூல், வேலைப்பளுவுக்கு இடையே நமக்கு வலி நிவாரணியாகத் திகழ்வது எழுத்துதான். பாடல்கள் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது’’ என்று பேசியிருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News