அந்த விஷயத்தில் நான் வேற மாதிரி.... பட்டுன்னு பதில் சொன்ன ஸ்ருதி ஹாசன்!
நடிகை ஸ்ருதிஹாசன்:
தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இவர் தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரை உலகத்திற்கு அறிமுகமானார் .

அதன் பிறகு என் மன வானில், வாரணம் ஆயிரம், உன்னை போல் ஒருவன் உள்ளிட்ட படங்களுக்கு பாடலும் பாடியிருக்கிறார். இதனிடையே ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசன் மான் கராத்தே, புலி, வேதாளம், இது நம்ம ஆளு, எல்கேஜி, கடாரம் கொண்டான் உள்ளிட்ட பல்வேறு வெற்றி தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அந்த விஷயத்தில் நான் வேற மாதிரி....

அவ்வப்போது நேர்காணல்களில் மிகவும் போல்டாக பதில் அளித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆடை குறித்தும் பெண்கள் இது போன்ற ஆடைகள் தான் அணிய வேண்டும் என்ற அடுக்குமுறை இருக்கிறது அது குறித்து உங்களது கேள்வி என்ன என கேட்டதற்கு?
என்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது? நான் எனக்கு பிடித்த ஆடை எதுவாகிலும் அதை அணிகிறேன். அது அவரவர் சுதந்திரம். எனவே என்னை பொருத்தரை இதுபோன்ற விஷயத்தில் விமர்சிப்பது தவறு என ஸ்ருதி ஹாசன் கூறியிருந்தார்.
