×

சினிமாவில் நுழைந்து 43 வருடம்... சத்தியராஜை கொண்டாடும் சினிமா உலகம்...

 
sathyaraj

1978ம் ஆண்டு வெளியான ‘சட்டம் என் கையில்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் சத்தியராஜ். துவக்கத்தில் சிறு சிறு வேடத்தில் நடித்தார். பின்னர் டெரர் வில்லனாக மாறி கலக்கினார். பல படங்களில் வில்லனாக நடித்தார். ஒரு கட்டத்தில் தனது சொந்த ஊர்காரரான மணிவண்னனின் அறிமுகம் கிடைத்த பின் அவரின் வாழ்க்கையே மாறியது.

sathyaraj

மணிவண்னன் இயக்கிய 100வது நாள் திரைப்படத்தில் சத்தியராஜின் மொட்டை தலை கெட்டப் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன் அந்த கெட்டப்பிலேயே சில படங்களில் நடித்தார். பின்னர் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். மணிவண்னன் இயக்கத்தில் அவர் நடித்த கடமை, கண்ணியம் கட்டுப்பாடு உள்ளிட பல படங்கள் வெற்றிபடங்களாக அமைந்தது.  குறிப்பாக அமைதிப்படை திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து டிரெண்ட் செட்டாக மாறியது. அதேபோல், பி.வாசு இயக்கத்தில் சத்தியராஜ் நடித்த பல திரைப்படங்கள் அவரை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாற்றியது.

sathyaraj

காலம் செல்ல செல்ல வயதுக்கேற்ற வேடத்தில் நடிக்க துவங்கினார் சத்தியராஜ். பாகுபலி படத்தில் அவரின் கட்டப்பா வேடம் பட்டி தொட்டியெங்கும் அவரை மீண்டும் பிரபலப்படுத்தியது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் அப்பா வேடத்தில் அவர் கலக்கி வருகிறார். 

sathyraj

இந்நிலையில், அவர் நடித்த முதல் திரைப்படமான சட்டம் என் கையில் வெளியாகி இன்றோடு சரியாக 43 வருடங்கள் ஆகிறது. அந்த திரைப்படம் 1978ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி வெளியானது. எனவே, அவரின் மகன் சிபிராஜ் இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களும் சத்தியராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News