Categories: Cinema News latest news

‘பச்ச குழந்தையினு பாலூட்டி வளர்த்தேன்’ ரேஞ்சுக்கு ஷங்கரை தள்ளிவிட்ட சித்தார்த்! ‘இந்தியன் 2’வில் இப்படி பண்ணிட்டாரே

Shankar Siddharth: இன்று கமல் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படம் இந்தியன்2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு திரையுலகில் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஷங்கர் தயாரிப்பில் கமல், காஜல் அகர்வால், சித்தார்த், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் இந்தியன் 2.

இந்த படத்தின் முதல் பாகமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. முதல் பாகத்தின் கிளைமேக்ஸிலேயே இரண்டாம் பாகத்திற்கான லீடை கொடுத்திருப்பார் ஷங்கர். இந்த நிலையில் இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரமாம். இதற்கு முன்பு வரை சித்தார்த் நடித்த ஒரு சில படங்கள் மட்டுமே மக்களை கவர்ந்து வந்திருக்கிறது.

இதையும் படிங்க: பிரபுவுக்கு அவ்ளோ பெரிய மனசா…? அதனால தான் எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்காரா..?

அதுவும் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த வெற்றியால் சித்தார்த்துக்கு கூடவே கொஞ்சம் கர்வமும் வந்து விட்டதாக கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு கொண்டு இருக்கின்றது. சித்தா படத்திற்கு பிறகு சித்தார்த்தின் அணுகுமுறையே கொஞ்சம் மாறியதாக சொல்லப்படுகிறது.

அதாவது இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷனில் கமலுக்கு எந்த அளவுக்கு ஒரு மரியாதை கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு தனக்கும் கொடுக்க வேண்டும் என கூறி வருகிறாராம் சித்தார்த். அதற்கு அவர் சொல்லும் காரணம் தான் வேடிக்கையாக இருக்கிறது. இந்தியன் 2 படத்தில் கமலை காப்பாற்றுவதே சித்தார்த் தானாம்.

இதையும் படிங்க: உண்மையான ரசிகன்-னா இவர்தான்! எம்ஜிஆருக்காக சத்யராஜ் செய்த செயல்! இதுவரை யாருக்கும் தெரியாத ஒன்னு

அதனால் இந்த அளவு கர்வத்துடன் பேசுகிறாராம் சித்தார்த். இன்று நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவிற்கு கூட சித்தார்த் வருவாரா இல்லையா என்ற ஒரு சந்தேகமும் இருந்து வருகின்றதாம். ஏனெனில் இந்த நேரத்தில் அவர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறாராம். அது வேண்டுமென்றே போனாரா அல்லது தற்செயலாக போனாரா என தெரியவில்லை.

ஆனால் இசை வெளியீட்டு விழாவிற்கு சித்தார்த் வருவது கொஞ்சம் சந்தேகம்தான் என கூறி வருகிறார்கள். இத்தனைக்கும் சித்தார்த்தை அறிமுகப்படுத்தியதே ஷங்கர் தான். பாய்ஸ் படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் சித்தார்த். அப்படி இருந்தும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு அவர் காட்டும் மரியாதை இதுதானா என நெட்டிசன்கள் சித்தார்த்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: என்னது 1000 படங்களை இயக்கினாரா? தாய்மார்களே தூக்கிக் கொண்டாடிய வில்லன் இவர்தாங்க…

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini