கருப்பு படத்துக்கு காரணமே அவர்தான்!.. சைலண்டா மறச்சிட்டாரே ஆர்.ஜே.பாலாஜி!...
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான கருப்பு திரைப்படம் பல வருடங்களுக்குப் பின் சூர்யாவுக்கு ஒரு சிறந்த வெற்றி படமாக அமைந்து 340 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து விட்டது. இந்த படத்தை சூர்யாவின் உறவினர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.
இந்நிலையில்தான், இந்த படம் உருவாகுவதற்கு காரணமே வேறு ஒருவர் என்பது தெரிய வந்திருக்கிறது. ஆர்.ஜே பாலாஜியை வைத்து சொர்க்கவாசல் என்கிற படத்தை தயாரித்தவர் சித்தார்த் ராவ். இவர் இசையமைப்பாளர் அனிருத்தின் மேனேஜர் ஆவார்..
இவரின் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி ஒரு படத்தை இயக்குவதாக பேசப்பட்டு ஆர்.ஜே பாலாஜிக்கு 3 கோடி அட்வான்ஸையும் சித்தார்த் கொடுத்திருக்கிறார். மூக்குத்தி அம்மன் ஸ்டைலில் ஒரு கதையையை உருவாக்கியிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. அது பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட கதை என்பதால் அதில் நடிக்க நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் என பலரிடமும் பேசியிருக்கிறார்கள்.
அப்போதுதான் நடிகர் விஜய் கதை கேட்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அவரை விஜயிடம் அனுப்பி வைத்திருக்கிறார் சித்தார்த். கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும் அவர் நடிக்கவில்லை
. அதன்பின் திரிஷாவை வைத்தே படத்தை எடுக்கலாம் என்கிற முடிவில் ஆர்.ஜே பாலாஜி இருந்தபோது சித்தார்த்திடம் பேசிய எஸ்.ஆர்.பிரபு ‘சூர்யாவுக்கு ஒரு நல்ல கதை தேவை’ என சொல்ல இந்த தகவலை சித்தார்த் ஆர்.ஜே பாலாஜியிடம் சொல்லி இருக்கிறார். பெண் கதாபாத்திரத்தை ஆண் கதாபாத்திரமாக மாற்றி விடலாம் என பாலாஜி சொல்ல ‘இது ஒரு நல்ல ஐடியா.. அப்படியே போய் சூர்யாவிடம் சொல்லுங்கள்’ என அவரை சூர்யாவிடம் அனுப்பி வைத்திருக்கிறார் சித்தார்த்.
அப்படி உருவான கருப்பு திரைப்படம்தான் சூப்பர் ஹிட் அடித்து தற்போது சூர்யா ஆர்.ஜே பாலாஜிக்கு ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஒரு சொகுசு காரையும் பரிசளித்திருக்கிறார்.
ஆனால் எந்த இடத்திலும் ஆர்.ஜே பாலாஜி சித்தார்த்தின் பெயரை சொல்லவில்லை. அவருக்கு நன்றியும் கூறவில்லை. இந்த செய்தியை வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார்.
