Sigma: டைரக்டர் மட்டுமில்ல.. டேன்ஸும் ஆடுவேன்!.. Sigma-வில் சர்ப்பரைஸ் தரும் ஜேசன் சஞ்சய்!...
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் போலவே தோற்றம் கொண்டிருப்பதால் அப்பாவை போலவே இவரும் நடிகராவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவருக்கு இயக்குனராவதில்தான் அதிக விருப்பம் என்பது தெரியவந்தது. திடீரென லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் ஒரு படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி ரசிகர்களையும் கோலிவுட்டையும் ஆச்சரியப்படுத்தியது.
அதேநேரம் பட அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகியும் ஷூட்டிங் துவங்காமல் இருந்தது. எனவே, வேறு தயாரிப்பாளர் பக்கம் போகலாமா என்று கூட ஜேசன் யோசித்ததாகவும், இது தொடர்பாக அவருக்கு நடிகர் அஜித் அறிவுரை கூறியதாகவும் அப்போது செய்திகள் வெளியானது. அதன்பின் ஒருவழியாக ஷூட்டிங் துவங்கியது. இந்த படத்தில் சந்தீப் கிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. மேலும், சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்திற்கு சிக்மா என தலைப்பு வைத்திருந்தார்கள்.

இந்நிலையில் சிக்மா படத்தில் நடிகை கேத்ரின் தெரசா ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். அந்த பாடலில் நாயகன் சந்தீப் கிருஷ்ணனுடன் சேர்ந்து ஜேசன் சஞ்சயும் நடனமாடியிருக்கிறார் என ஒரு செய்தி வெளியே கசிந்துள்ளது. அப்பா விஜயுடன் சேர்ந்து வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் நடனமாடி இருந்தார் ஜேசன். பல வருடங்களுக்கு பின் அவரின் நடனத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
