சிக்மா ரிலீஸ் தேதி அறிவிப்பு!.. இந்த தடவை மிஸ்ஸே ஆகாது!..
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் முன்னதாக ஜூலை 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு புதிய ரிலீஸ் தேதிக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், சிவ பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேப்பி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தமன் S இசையமைத்துள்ளார்.

இதனிடையே, ஜேசன் சஞ்சய்யின் முதல் படமாக ‘சிக்மா’ உருவாகியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய்யின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, இயக்குநராக ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தில் என்ன மாதிரியான கதை மற்றும் மேக்கிங்கை கொடுத்திருக்கிறார் என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ரிலீஸ் தேதி தற்போது அக்டோபர் 2 என உறுதி செய்யப்பட்டுள்ளதால், படத்தின் டிரெய்லர், பாடல்கள் மற்றும் அடுத்தடுத்த புரமோஷன் பணிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ‘சிக்மா’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.