சிக்மா 2வது பாடல் “அய்யய்யோ அம்மாடி” ரிலீஸ் அப்டேட் வந்துடுச்சு!..
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’ நாளை ஆகஸ்ட் 12 வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், சிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜாபி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

‘சிக்மா’ திரைப்படம் முதலில் ஜூலை 31, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. புதிய திரையரங்கு வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இரண்டாவது பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’ நாளை வெளியாக உள்ளதால், பாடல் மூலம் படத்தின் அடுத்த கட்ட புரமோஷன்களை படக்குழு தொடங்கியுள்ளது. முதல் பாடல் சிக்மா ஸ்டைல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், புதிய பாடல் எப்படி வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
காதல் பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலிலும் ஜேசன் சஞ்சய் வருவாரா? என ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர். மேலும், லைகா சீக்கிரமே ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.